உன்னை காதலித்தேன் என்ற நினைவுகள் இருக்கும்வரை

கனவு காதலியே
உன்னை தேடியே
என்னை காணலையே
தொலைந்தும் இருக்கின்றேன்

வார்த்தை ஜாலம் செய்ய
கண்களால் அறிந்தவளே
உன் காலடியில் கிடக்கிறதோ
சில கவிஞர்களின் முகவரிகள்

மெனக்கிட்டு அழகு கொள்ளும்
சில பெண்ணை பார்த்திருப்பேன்
அழகே மெனகிடுவது ..........
பெண்ணே உன்னிடம்தான்

முதல் பார்வையில் காதல் வரும்
என்பதில் உடன்பாடு எனக்கு இல்லை
உன்னை கண்டால் வருமோ என
சில நேரம் ஐயமும் வருகிறதே

என் காதலை மறுத்தாலும்
எனக்கு கவலை இல்லை
உன்னை காதலித்தேன் என்ற
நினைவுகள் இருக்கும்வரை ........

எழுதியவர் : rudhran (11-Feb-15, 4:03 pm)
பார்வை : 118

மேலே