பிப்ரவரி 14

வாழ்த்து சொல்ல வந்தேன் காதலி ,
உந்தன் மடியில் தூங்க....
உன்னை காண நெஞ்சம் ஏங்கும்,
அன்பே உன்னில் வாழ....
சாரல் போல தென்றல் வீசி
மெல்ல உன்னை தடவ ,
ஆசை எல்லாம் பொத்தி வைத்தேன்
இந்த நாளில் தழுவ...
பனித்துளி அழகு போகாது
பெண்ணே ,
உந்தன் அழகு மாறாது....
மணித்துளி என்றும் பேசாது
ஆனால்,
நீயின்றி அதனும் வாழாது.
கண்மணி,
அழகு பொன்மணி,
என் நெஞ்சமே என்றும் நீயடி...
சொல்லடி ,
என் பூங்கொடி ,
உன் காதலே என்றும் நானடி.....

எழுதியவர் : மோகன்குமார் (13-Feb-15, 11:00 am)
பார்வை : 77

மேலே