பிப்ரவரி 14
காதலர் தினம்
********************************************************************************
கேட்பாரற்ற காளைக்கு
பொட்டு வைத்து பூக்கட்டும்
பொங்கலின் மறுநாளை,
இன்றைய
காதலர் தினத்துடன்
உடன் நிறுத்தி,
ஆறு வித்தியாசம்
காண்பவர்க்கு ஒரு
APPLAUSE அளிக்கலாம்...
முழுவதுமாய் முப்பது
நாளில்லா பிப்ரவரி...
இருபத்தி எட்டை(28) இரண்டினால் வகுத்துவிட்டு
"நடுநிலை காதலுக்கு
பதினான்கே(14) பிறந்தநாள்" என
காலக் கண(கிரு)க்கனும்
கச்சிதமாய்
கணித்து வைத்தான்...
பிப்ரவரி 13 ஐ
காலண்டரில் கிழிக்கையிலே
இதயமும் கூடஇன்று
இப்படி கிழியலாம்
என பிப்ரவரி14 உம்
ராசிபலன் பேசுகிறது...
மன்னிக்கவும்..!
உலகமே எழுத துடிக்கும்
ஓர் இறுதித் தேர்வை
அவசரமாய் மனிதன் ஏனோ
பிப்ரவரி14 இல்
எழுதி விடுகிறான்...
பொய்கள் பல கூறி
TITANICஐ கரைசேர்க்கும்
காதல் மாலுமிகளே...!
உண்மைகளை ஒப்பித்து
உற்றவளின் உளம் பறியுங்கள்..
அப்போது காகித கப்பல்களும்
கரைகளைத் தொட்டிருக்கும்...
POSESSIVENESS வார்த்தைக்கு
போஷாக்கு அளிக்காத
காதல்களே இன்றும்
COMPLAN பிள்ளைபோல்
கோபுரமாய் திகழ்கின்றன...
அறிவாளிகளுக்கு ARREAR தரும்
அழகிய தேர்வுத்தாள்
காதல் பள்ளிகளில் அச்சிடப்படுகிறது...
1+1=2 எனும் எளிய EQUATIONயே காதல்...
பாவம்..! அனால்,
எளியவைகளையும்
அந்நியமாய் பார்த்து
பழகிய அறிவுக்கு,
காதல் EQUATION என்றும்
கடினமாகத் தான் போகிறது...
அறிவை கழற்றிவிட்டு
அன்பை மூச்சிசையாய்
காதலுக்குள் செலுத்துங்கள்...
அப்போது,
காதல் கூட
குழந்தையை போல்
காலண்டர் தேதி ஒன்றில்
இதயதாய்க்கு கருத்தரிக்கும்...
ROMEO-JULIET பார்த்து
கண்ஒழுகி காதல் செய்யும்
காதல்காவியங்கள்
படைத்தவர்களே..!
இளமை கண்ணாடியை
ஒரு நிமிடம்
கழற்றி விட்டு
உற்றுப்பாருங்கள்...
சண்டைக்கும் சச்சரவிற்கும்
இடைவேளை விடாமல்
ஓடிஉழன்றிடும் ஒரு காதல் கதை
உங்கள் வீடுகளிலும்
பேசிக் கொண்டிருக்கிறது...
'பாரதி ராஜா' களாலும்
'வாசுதேவ் மேனன்' களாலும்
காட்டப்படாத ஒரு காதல் அது!
அழகு பெரிதாய் நடிகர்கள் இல்லை...
செவிகளை நனைத்துருக்கும் மெட்டுகளும் இல்லை...
மணிக்கணக்கில் பேசும் போன்களும் இல்லை...
திரைகளுக்கு வருடல் தரும் TEXTகளும் இல்லை...
மெல்லிய முத்தங்களும் இல்லை...
ஸ்பரிசங்களின் உஷ்ணமும் இல்லை...
இளைஞர் காதல் அகராதிகளில்
இல்லாத வார்த்தை கொண்டு
முதியவர் இருவர் எழுதி கொண்டிருக்கும்
ஒரு உயிருள்ள காதல் கதை அது...
பிப்ரவரி14 இல்
அவர்கள்
செவிகளுக்குமட்டுமே
சொந்தமான வார்த்தைகளை
அவர்களிடம் கொண்டுசேருங்கள்
ஆம்..!
நேசங்களில் பூத்துறுகும்
பெற்றோர் செவிகளுக்கும்
சென்றுதான் சேரட்டும்
அவர்களுக்கான தேசிய கீதம்
"HAPPY VALENTINES DAY " -JK :)