இக்கரைக்கு
லவ்வெண்டால் லவ்வு அப்பிடி ஒரு லவ்வுன்னு லவ்விக்கொண்டிருக்கும் ஒரு நண்பனிடம்
"மச்சி.... நீ உன் காதலியை வெளியே கூட்டிடு போகும் போது எதிரே அழகான ஒரு பொண்ணு போகும் போது உன் மனசு எப்பிடா இருக்கும்..." கேட்டேன்.
"ஏ...ஏ... ஏன்டா..... உனக்கு வேற வேலையே இல்லையாடா?"
"உனக்கு உதவி செய்யலாம் எண்டுதாண்டா"
"நீ ஒண்டும் செய்யதேவையில்லை..... மூடிடு போனாய் என்றாலே போது. காலங்காத்தல 'மூட' குழப்பிகிட்டு....."
(# அதானே பார்த்தேன்..... இன்னும் எத்தனை நாளைக்கு தான்டா நல்லவங்களாக நடிப்பீங்க)
நாலு நாட்கள் கழித்து மீண்டு அவனை வெள்ளவத்தையில் பேரூந்திற்கு காத்துக்கொண்டிருக்கும் போது கண்டு கதைத்தேன். எனக்கான பேரூந்து வந்து புறப்படும் நேரம் பார்த்து மீண்டு அதே கேள்வி....
"நாசமா போனவனே...... ஏன்டா உனக்கு இந்த வேண்டாத வேலை.... சத்தியமா சொல்றேண்டா... உனக்கெல்லாம் லவ்வே செட்டாகாதுடா...."
'ஆஹா... நம்ம விஷயம் ஊருக்கே தெரியுமோ...' என நினைத்துக் கொண்டு
"எல்லாம் உனக்காதான்டா...."
"என்னது.....?"
"இல்லை மச்சி............ அவளை விட அழகா ஒன்னு கிடைக்கும்லயாடா... " சொல்லிக்கொண்டே புறப்பட்ட பேரூந்தில் ஓடிச்சென்று ஏறிக் கொண்டேன்.
.
.
.
.
பி.குறிப்பு - இந்த விஷயத்தை யாரோ ஒருத்தன் அவளுடைய காதிலையும் போட்டு வைக்க....... முடிவு..... இரண்டு பேரும் என்னை தேடிடு இருக்கிறதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்திருக்கு.
# வாசா....!!! அந்த பக்கம் போனாய் என்றால் சங்கு தான்டியோவ்.........
(அந்த பக்கம் தலைவைத்துகூட படுக்க மாட்டேனாக்கும்.)
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
