தோழியே சொல் உன் சிறந்த நண்பன் நான் என்று


என் தோழியே

நீ உண்ணும் உணவின் மீது கூட

பொறாமை வருகிறது

என்னைவிட நெருக்கமாய்

நாளுக்கு நாள் அதிகரிதுகொன்டே

போகிறது நம் நட்புக்கான இடைவெளி

உன் சிறந்த முதல் நண்பன் நான் என்று

சொல்ல யாருக்கும் தெரியாத

ஓட்டபந்தயத்தில் ஓடுவது போல்

ஓடிகொண்டிருக்கிறேன்

உனது நட்புலகத்தில் நண்பன்

என்னும் பரிசு வாங்க

இப்போதெல்லாம் நீ எதையும்

நேசிக்க என் மனம் அனுமதிப்பதில்லை

என் நட்பை தவிர

காத்திருப்பு வரிசையில் நிறப்து போன்ற

உணர்வு நான் கடைசியாக இருப்பதை கனவு

அறிவுக்கு தெரிந்தது மனதிற்கு தெரியாது

நான் தான் உன் சிறந்த நண்பன் என்று

படிக்கும் பொது கூட இல்லை இத்தனை

கவனம் அத்தனையும் இருக்கிறது

உன் நட்பை இழக்க கூடாது என்பதில்

எழுதியவர் : rudhran (23-Apr-11, 3:30 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 593

மேலே