பேராண்மை மிக்கவள்

பெண்ணே !
நீ
புன்னகை சிந்தியது போதும் ...
புருவம் உயர்த்து!

பூப்பெய்திய போதும்
பூமிப்பந்தாய்ச் சுழல் ...

வளையல் அணிந்த கை
வாளும் பிடிக்கட்டும் !

களையெடுத்த கை
காவியம் படைக்கட்டும் !

பாத்திரம் தேய்த்த கை
சாத்திரம் எழுதட்டும் !

பொட்டு வைத்த முகம்
திட்டம் போடட்டும் !

தாழ்ப்பாள் நீக்கு !
தடையைத் தகர்த்தெறி !
தரையில் பற !
வானில் நட!

உன்
கண்கள் சிவக்கட்டும் !
கற்பழிப்பு என்னும்
வன்கொடுமை சாகட்டும் !

மலரே !
மலையாய் நீ மாறு !
மார்தட்டி நில் !

பொன்னகையைக் கழற்று!
பொய்முகம் தவிர் !
எதுவந்த போதும்
எதிர்த்து வெல்!

அங்கம் காட்டும்
ஆடையை மாற்று !
உயிரினும் மேலாய்க்
கற்பைப் போற்று!

பெண்மை என்றால்
மதிக்கத்தக்க
பேராண்மை மிக்கவள்
என்பதை உணர்த்து !

எழுதியவர் : தன்முகநம்பி (19-Feb-15, 9:20 pm)
சேர்த்தது : தன்முகநம்பி
பார்வை : 287

மேலே