இணைவும் பிறப்பும் - உதயா

அணுக்கள் இணைந்துதான்
............அண்டமே உருவானது
உயிர்கள் இணைந்துதான்
............உறவுகளே உருவானது

மதங்கள் இணைந்துதான்
............தனி தனி கோவில்கள் உருவானது
அழகுநிறமும் நறுமணமும் ஒருங்கிணைந்துதான்
............இரசிக்கும் வண்ணப் பூக்கள் உருவானது

பசுமை நிறங்கள் அனைத்துதான்
............நினைவியக்குகச் செய்யும் வனங்கள் உருவானது
விண்மீன்கள் ஒன்றிணைந்துதான்
............விண்ணில் பூந்தோட்டமே உருவானது

மழைத்துளிகள் இணைந்துதான்
............உழவன் மனதில் ஊற்றுப் பிறந்தது
தன்னம்பிக்கை பிறந்து தான்
............மனதில் களைப்பு கலைந்தது

தோல்விகள் இணைந்து தான்
............அனுபவங்கள் பிறந்தது
அனுபவங்கள் இணைந்து தான்
............மனதில் அமைதிப் பிறந்தது

ஏனோ ??

உதிரத்தின் நிறம் இணைந்தும்
............மனிதர்களின் உள்ளங்கள் இணையவே இல்லை
உள்ளங்கள் என்று இணையுமோ அன்றுதான்
............உண்மையான உலகமும் பிறக்கும் ! சாதி !மதமும் அழியும் .

எழுதியவர் : udayakumar (21-Feb-15, 12:38 pm)
பார்வை : 87

மேலே