மழையும் மனிதமும்
..."" மழையும் மனிதமும் ""...
வாழ்வின் ஊன்றுகோல்
எல்லாவருக்கும் பொது
மழையும் மனிதமும்
விசாலமான மனத்தால்
பொழியுமிடம் பார்ப்பதில்லை !!!
மகள்பெற்ற மழலையோ
மழைக்காய் குடைபிடிக்க
நெஞ்சில் சுமந்த மகளோ
என் தள்ளாத வயதினில்
சுமந்தே எனக்கு தாய்யானால் !!!
தூக்கி வளர்த்த தந்தையும்
ஊட்டி மகிழ்ந்த தாத்தனும்
எடுத்தே சொல்லுகின்றது
உறவுகளின் உண்மையின்
உன்னதமிங்கே மழைக்காட்சியில் !!!
நாகரீகமே வளர்ந்தாலும்
நடுத்தெருவில் கிடந்தாலும்
பாரீர் பந்தத்தின் பிணைப்பை
மனிதம் இந்த மண்ணிலே
இன்னும் நிரந்தரமே மரிக்கவில்லை !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,
அப்துல்ஹமீத்(எ)சகூருதீன்..