இனிப்பா

இரவெல்லாம் இன்ப உறக்கம்..
சூரியச் சூடு மண்தாண்டி தொட்டபோது
மணி 5.. உறக்கம் சற்றே விலகி
உடம்பை நெட்டி சோம்பல் முறித்து
துள்ளி எழுந்து ...
பூவின் இதழில் ஏறி,
தேன்துளி குளத்தில் குளித்தெழுந்து,
மகரந்தக் காம்புகளால் தலை துவட்டி,
ஒட்டிய இனிப்பு ஆடையை வழியெங்கும் வடியவிட்டு
புற்றென்னும் வீட்டிற்குள் நுழைந்தபோது
காலையுணவு காத்திருந்தது..ஒரு சர்க்கரை தூள்..
எறும்பு தலையிலடித்துக்கொண்டது ...
அட .. இன்றும் இனிப்பா...?

அதிர்ஷ்டமின்றி க.நிலவன்..

எழுதியவர் : (21-Feb-15, 1:52 pm)
சேர்த்தது : க நிலவன்
Tanglish : inippa
பார்வை : 47

மேலே