இரும்புச் சத்துக்களின் சுரங்கம்

இந்தியப்பெண்களில் 70 சதவிகிதம் பேர் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

அதுவும் கருவுறும் பெண்கள்தான் அதிகம் என்கிறார்கள் ஊட்டச்சத்து
நிபுணர்கள்...

ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜனை உடலின் மற்ற திசுக்களுக்கு எடுத்துச்செல்வது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வேலை...

இந்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபினை அதிகரிக்க‌ இரும்புச்சத்து உதவுகிறது.

கோழிக்கறி,மீன்கறி,பசுமையான இலை கொண்ட காய்கறிகள் ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

காலிபிளவர் இலைகள்,முள்ளங்கி இலைகள்,வெந்தயக்கீரை,முருங்கைக்கீரை,தாமரைத்தண்டு,
கருப்பு உளுந்து,கருப்பு எள்,சோயாபீன்ஸ்,தர்பூசணி,பேரிச்சம்பழம் போன்றவை இரும்புச்சத்துக்களின் சுரங்கம்தான்.

நாம் சமையலில் சேர்த்துக்கொள்ளும் மஞ்சள்தூள் இரும்புச்சத்துள்ள‌ ஒரு பொருள்....

எழுதியவர் : (21-Feb-15, 6:41 pm)
பார்வை : 121

மேலே