விண்ணப்பம்
கடவுளே ...!
இவ்வுலகம் அழிந்த பின்
நீ
மீண்டும்
ஒரு உலகம் படைத்தால்
கெஞ்சி கேட்கிறேன்
அங்கேயாவது
ஆணுக்கும் ,பெண்ணுக்கும்
காதல்
உணர்வுகளை
கொடுத்து விடாதே
கொடுத்தால்
அவர்களுக்கு இதயம்
வைத்து படைத்து விடாதே
அப்படியும் படைத்தால்
ஒரு இதயம் மட்டும்
வைத்து படைத்து விடாதே
காதலின்
அவஸ்தைகளை
தாங்க
ஒரு இதயம் போதாது
நூறு இதயம் கொடு.
இப்படிக்கு
வலியின் வழியில்
"ஏனோக் நெஹும்"