தொலைக்காட்சியில் தொலையுது மானுடம்..

தொலைந்து
முகங்களை
தொலைக்காட்சி
காட்டிக்கொண்டிருக்க
இதில்
தொலைக்கப்பட்ட
மனுக்ஷ்ய
முகத்தை
எங்கே தேடுவது

பொழுதை
களிப்பாக்க
வந்த ஒன்று...
இனி
"வெளி"க்கு
போகையிலும்
தேவைப்படக்கூடும்....


அண்டைவீட்டார்
எதிர்வீட்டாரென்று
மனிதர்களோடு
உறவுகளெல்லாம்
மறந்தேபோனது..
நம்வீட்டிலேயே
நாம்
நாடுகடத்தப்பட்ட
குற்றவாளிகளைப்போல்...


தொடர்களின் நேரத்தில்
வீட்டுக்குள்
நுழைகிற மனிதர்கள்
ஹிட்லரின் வாரிசுகளென்றே
நிச்சயம் செய்யப்படுகிறார்கள்

இந்த
மாரீசமானின்
சீரியல்
மயக்கத்தில்
சீதைகளெல்லாம்
சிதைந்துகொண்டிருப்பதென்னவோ
உண்மைக்கதை
கைபிடித்த
இராமர்களோ
இராவணனாக
மாறிக்கொண்டிருப்பது
கிளைக்கதை


கட்டிலறை காட்சிகளை
தொட்டில் குழந்தையும்
காணவும்முடிகிறதே..
யார் செய்த
குற்றம்.....?

நல்லதனமான
உறவுகளெல்லாம்
மறக்கடிக்கப்பட்டு
கள்ளதனமான
உறவுகள்தான்
கற்பிக்கப்படும் அவலம்....

மானுடத்தின்
மரபுவேர்களை
அழுக
நாகரிககிளைகளை
மேலுக்காய்
அலங்கரிப்பது
எந்த
நியாயம்


பாலும்
கலந்துதான்
அன்னப்பறவையாய்..
நிகழ்ச்சிகளைத்தான்
நீங்களே
தேர்வு
தொலைக்காட்சிகளின்
கேள்வி
நியாயம்தானா


மெல்லமாய்
திறந்திருக்கிற
கதவை
தட்டிச்செல்லாமல்
சன்னலில்
எட்டிப்பார்ப்பதுதான்
மானுடவக்ரம்

மனதின்
ஆழத்தில்
எரிமலையாய்
கனன்றுகொண்டிருக்கிற
இந்த
ஆபாசநெருப்பினை
கிளர்ந்தெழ செய்வது
நியாயம்தானா ... ?

மனிதன்
ஆசைகளின்
நெருப்பில்
அறியாமலே
குளிர்காயும்
மண்புழு
உணர்ச்சிகளின்
தூண்டுதலில்
உணராமலே
உருகிப்போவான்
மெழுகைப்போல

பஞ்ச பூதங்களாலான
மனிதத்தை
பஞ்ச பூதங்களையும்
ஆக்ரமித்து
நஞ்சாக்குவதுதான்
தொலைக்காட்சிகளின்
தொலைதூரதிட்டமா..?


தொடரில்
இறந்துபோன
ஒரு
கதாபாத்திரத்திற்காய்...
அழுதுகொண்டிருக்கிறாள்
என் மனைவி...
அவள்
உறங்கும்போது
தலைவலிக்கும்..
தைலத்தை
தேடிக்கொண்டிருக்கிறேன்.....

எழுதியவர் : முருகானந்தம் (24-Apr-11, 4:55 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 492

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே