தற்காலிக சென்னைவாசிகள் ( பேட்சுளர்கள் )

கல்லூரி தேர்வு முடிந்து
நண்பர்களை பிரியும் துக்கம்
ஒருபுறம் இருந்தாலும்....
வளாகத் தேர்வில்
சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனத்தில்
தேர்வாகி
'முதன் முறையாக
சென்னை செல்லும்
சந்தோசமும் மறுபுறம்...


பலர் சொன்ன தகவல்களினால்
பல கற்பனை கனவுகளோடு
இருந்த எனக்கு
சென்னை செல்லும்
நாளும் வந்தது...


முதன் முறையாக
வேளைக்கு செல்வதால்
பெரியவர்களின் ஆசிர்வாதத்திற்கும்
உற்றார் உறவினர்களின்
வலியனுபலுக்கும் குறைவில்லை...


இரவு 8 .30 மணி
விரைவு பேருந்தை பிடித்து
பல கனவுகளைத் தாங்கி
காலை 8 மணி அளவில்
சென்னை கோயம்பேடு
பேருந்து நிலையத்தில்
இறங்கினேன்...


கம்பெனி விலாசத்தை
வைத்துக் கொண்டவாறே
பலரிடம் விசாரித்து
ஒருவழியாக
பேருந்து மூலமாகவே
மதியம் 12 மணியளவில்
கம்பெனியை அடைந்தேன் .
ஆட்டோ , கால் டாக்ஸி எல்லாம்
வேண்டாம் என்று
என் நண்பர்கள் சொன்னது
நியாபகமிருந்ததால்....


கம்பனியில் நான் சேருவதற்காக
கொடுக்கப்பட்ட
கடிதத்தை கொடுத்துவிட்டு
கம்பெனியில் சேர்ந்துவிட்டேன்
என கம்பெனியினர் தந்த
உறுதிக்கடிதத்துடன்...


என் கல்லூரி சீனியர் எப்போதோ
தந்த மொபைல்
நம்பரை தேடி எடுத்து
தொடர்பு கொண்டேன்,
தங்குவதற்கு இடம் வேண்டும்
என்ற காரணத்தால்...


சீனியரோ பல காரணங்களை
சொல்லி
என்னை வரவிடாமல்
செய்கிறார்
என்பது புரிந்தும்
வேறு வழியில்லாமல்
முகவரியை பிடிங்கிகொள்லாத
வண்ணம் கேட்டு
பெற்ற முகவரியுடன்
அவர் ரூம்
சென்று சேர்ந்தேன்"
அவரின் இந்த செயல்
புரியாத புதிராகவே இருந்தது...


மிகவும் கஷ்டப்பட்டு
பல இடங்களில்
தேடி அலைந்த பின்பும்
ஏலே நாட்களில்
என் கம்பெனி இல்
பணிபுரியும் நண்பர்கள்
உதவியால் அவர்கள்
ரூம் இல் 3 பேருடன்
4வதாக தங்கிக்கொண்டேன்...


சீனியர் ரூம் இல் இருந்து
என் புது ரூமிற்கு
நான் கிளம்பிய அன்று
என் சீனியர் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவேயில்லை
என்பது
எனக்கு தெரிந்தது...

புது ரூம் இல்
அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்
அம்மா வின் கையால் செய்த
அமிர்தமான சாப்பாடுகளை
சாப்பிட்ட எனக்கோ
இது ஒரு புது
அனுபவமாகவும் ஆச்சர்யமாகவும்
இருந்தது...


இரவில் தூங்கும்
நேரமோ
நான்கு பேரும்
அருகருகே இடைவெளி
இல்லாமல் படுத்துறங்குவோம்
வீட்டில் கட்டில் மெத்தையில்
படுத்துறங்கிய எனக்கோ
புதுவித உணர்வாக இருந்தது....


4 பேருக்கு மேல் யாரும் இருக்ககூடாது,
ஒரு பேன்,ஒரு லைட் தன போடணும்
அயன்பாக்ஸ் யூஸ் பண்ண கூடாது
தண்ணீர் ஒரு நாளைக்கு 2 குடம் தான்
வாரத்தில் 2 நாட்கள் தான் துணி துவைக்கணும்
நண்பர்கள்,உறவினர்கள் யாரும் வந்து தங்ககூடாது
1ந்தேதி கரெக்டா வாடகை தரனும்..........
இதெல்லாம் வீட்டு ஒணரின் கட்டுபாடுகள்....


சந்தோசமாக தொடங்கும்
மாதத் தொடக்கமும்...
சங்கடமாகவே முடியும்
மாத கடைசியும்...
எங்களின் "தேசியகீதம்"...


போனில் நலம் விசாரிக்கும்
அம்மாவிடம்
ராஜா போல் இருக்கிறேன்
என சொல்லும் பொது
கண்களிலிருந்து வரும் கண்ணீரையும்
துடைத்தபடி சிரிக்கும்
நாங்கள் "விசித்திர ஜீவன்கள்"...


சம்பளம் வாங்கிய
ஞாயிரன்று
தி.நகர் சென்று
குடும்பத்தில்
அனைவருக்கும்
உடைகள் எடுத்து
அனுப்பும் போது
நாங்கள் "அன்பு ராஜாக்கள்"...


நண்பர்களிடம் தொலைபேசியில்
நலம் விசாரித்து
நண்பர்களையும்
சென்னையை சுற்றி பார்க்க
அழைக்கும் போது
நாங்கள் "நட்பு சாம்ராஜ்யங்கள்"...


விடுமுறை எடுத்து
சொந்த ஊர் செல்லும் போது
நிரந்தர சென்னைகாரர்களை
போல உடையணிந்து
செல்லும் போது
நாங்கள் "தற்காலிக கோமாளிகள்"...


இவ்வளவு வேகத்திலும்
வாகனங்கள் செல்லுமா
என அதிசயக்கும் வகையில்
செல்லும் வாகனங்கள்...
வானுயர்ந்த கட்டிடங்கள்..
டிப்டாப் மனிதர்கள்...
புகழ் பெற்ற LIC ..
கலர்புல் கல்லூரிகள்..
பாலின வேருபாடிலாமல் உடையணிந்த பெண்கள்..
சீறிப்பாயும் மின்சார ரயில்..
சுட்டெரிக்கும் வெயில்....
புழல் சென்ட்ரல் ஜெயில்..
அயல்நாடுகள் தோற்கும் வண்ணம் வகை வகையான மேம்பாலங்கள்...
மீனம்பாக்கம் விமான நிலையம்..
காதலர்கள் கூடும் பெசென்ட் நகர்..
கொள்ளை கொள்ளும் மெரினா..
புரட்சித்தலைவரின் சமாதி..
புகழ் பெற்ற போயேஸ் கார்டன்..
இரவு நேர பார் டான்ஸ்..

பரபரப்பான காலை
அமைதியான மதியம்
பவ்யமான மாலை
பகலைப்போல இரவு..
இவற்றுடன்
பைல்களை கையில் வைத்து கொண்டு அலையும் மனிதர்களும்...
எங்களைப் போன்ற பேட்சுளர் களும் சென்னை இன் மிக முக்கிய அடையாளங்கள்..


""இவற்றில்"".....

என் முதல் தொலைபேசி அழைப்பிற்கு சீனியரின் மழுப்பலான பதிலுக்கும் , நான் அவர் ரூம் ஐ விட்டு கிளம்பும் போது அவர் உள்ளுக்குள் அடைந்த அளவில்லா மகிழ்ச்சிக்கும் புரியாத புதிராக இருந்த எனக்கும்
விடை கிடைத்தது...
நானும் இவ்வளவு நாள் சிங்கார சென்னை-ன் சாதாரண வாசியாக இருப்பதால்...

-ஜி.உதய்...

எழுதியவர் : G .Udhay (25-Apr-11, 7:15 am)
பார்வை : 557

மேலே