என்ன தவம்
தாய்மடி இழந்த
சேய் மனம்
போல....தவித்து
நானும்
தனித் தீவில்
வாழ்கிறேன்.....
தொலைவில்
போனாலும்
தொலைந்து போகாத
துன்பங்கள்
துரத்துதே
இன்னும் என்னை.......
கனவெல்லாம்
நிஜமென்று
நான் எண்ணி
நிஜங்களை
பறிகொடுத்த
நிமிஷத்தில்
நிற்கிறேன்......
உறவை தொலைத்து
உயரத்தில்
உலாவர
உலகில் யாரால்
முடியும்....?
உதிரும் பூக்கள்
எல்லாம்
உதிரிப் பூக்களாய்
உனக்குத்
தெரியும்
நேரமிது.......
திண்டாடும்
மனசின்
வடுக்களை
யாருக்கும்
புரியாமல்
கொண்டாடும்
என் மனசில்
நிரந்தரமாய்
வடுக்கள்......