ஞாபக மறதி

நோயாளி - டாக்டர் டாக்டர் நீங்க தான் என்ன காப்பத்தனும்

டாக்டர் - பதட்டபடாதீங்க என்ன ஆச்சுனு சொல்லுங்க

நோயாளி - எனக்கு ரொம்ப ஞாபக மறதி டாக்டர் இதுனால என் வாழ்க்கையே நரகமாகிடிச்சு டாக்டர்

டாக்டர் - அப்படி என்னாச்சு ?

நோயாளி - ஒன்னா ரெண்டா நிறையா இருக்கு டாக்டர் இதுனாலேயே என் பொண்டாட்டி என்ன வீட்ட விட்டே துரத்திட்டா டாக்டர்

டாக்டர் - அப்படி என்னய்யா நடந்துச்சு ஒன்னு ரெண்ட சொல்லுங்க

நோயாளி - நானும் அவளும் ஹோட்டல்ல சாப்ட போயிருந்தோம் ஞாபக மறதில அவள அங்கேயே விட்டுட்டு பில் பே பண்ணாம வந்துட்டேன் பவம் அவ குண்டான உடம்ப வச்சுகிட்டு நாள் பூரா மாவாட்டிருக்கா

டாக்டர் - ஐயோ அப்புறம் என்னாச்சு ?


நோயாளி - அப்புறம் என்ன ஆக வீட்டுக்கு வந்து என்னைய மாவா ஆட்டிட்டா

டாக்டர் - கொடும தான் என்ன பன்றது சரி இந்த மருந்த சாப்டுங்க எல்லாம் சரியாகிடும் பீஸ் 500 கொடுங்க

நோயாளி - அட சொட்டத்தலையா நீ யாரு? என்ன 500 ருபாய் கேட்க உங்க அப்பன் வீட்டு சொத்தையா கொடுத்து வச்சுருக்க. ஆமா நான் எப்படி இங்க... என்ன கடத்திட்டு வந்திட்டியா? கிட்னி திருடுற கும்பலா நீ இருடா உன்ன கொல்லாம விடமாட்டேன்


டாக்டர் - யோ யோ விட்டுருயா அது ஆப்ரேசன் பன்னக்கூடிய கத்தியா அத வச்சு என்ன ஒன்னும் பன்னிராதையா ப்ளீஸ்

நோயாளி - ஊசி போடும் இடத்தில் ஒரே அழுத்தாக அழுத்தினார்

டாக்டர் -- ஐயோ அம்மாமாமா..யாராவது காப்பாத்துங்க !!!!

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (27-Feb-15, 11:04 pm)
Tanglish : gnabaga maradhi
பார்வை : 152

மேலே