என் ஆசை அவளுக்காக

பட்டுப் புழுவாக
மாறிட ஆசை
அவள் மேனியில் ஆடையாக

ரோஜா மலராக
மாறிட ஆசை
அவள் கூந்தலில் அழகாக

வட்ட நிலவாக
மாறிட ஆசை
அவள் நெற்றியில் வட்ட பொட்டாக

சிப்பிக்குள் முத்தாக
மாறிட ஆசை
அவள் கழுத்தில் முத்து மாலையாக

சலங்கை ஒலியாக
மாறிட ஆசை
அவள் காலில் கொலுசாக

கண்ணாடியாக
மாறிட ஆசை
அவள் முகம் என்னில் தெரிந்திட

எழுதியவர் : கவியாருமுகம் (1-Mar-15, 1:36 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : en aasai avalukkaka
பார்வை : 111

மேலே