காத்திருக்கிறேன்

நீயில்லை என்று நன்கறிந்தும்
அடிக்கடி அனிச்சையாய்
அழைத்துக்கொண்டே இருக்கிறேனடி,,
அதிகாலை
அலறிய அலைபேசி நிறுத்தி
அருகாமை மேசையில் தேநீரைத்
துளாவியபடி முதல்முறை!
குளியலறை உள்ளிருந்து
எடுக்க மறந்த பூத்தூவாளைக்காய்
இரண்டாம் முறை!!
போட்டுக்கொண்ட சட்டையில்
மாட்டிக்கொண்ட பொத்தானை
அவிழ்க்கவென அடுத்தமுறை!!
பசியாறிய கைகளை
பாந்தமாய் துவட்ட
முந்தானை தலைப்புக்காய் மற்றொருமுறை!!
நேற்று நான் ஓட்டிவந்த வாகனத்தின்
சாவியை தேடித்தரவும்
உன் விரல்களையே
எதிர்பார்த்து
திரும்பத் திரும்ப
உன் பெயரை உச்சரிக்கும் போதுதான்
உணர்கிறேனடி!!
கூப்பிட்ட குரலுக்கு நீ ஓடோடி வரும் போதெல்லாம்
உள்ளூற உனை அன்பால்
அடிமையாக்கிவிட்ட மிதப்பில்
மிதந்திட்ட
என்னையே
எனக்கே தெரியாமல்
அக்கறையாய் நீ ஆட்டுவிக்கும்
பொம்மையாய்
மாற்றிவிட்டிருக்கிறாயா?
மாயக்காரி!!
மாலைக்குள் வந்து விடுவேன்
என்று சொல்லி சென்றுவிட்டு,,
நீயில்லா ஒரு நாள் நரகத்தைக்
நான் காண,,
கண்டிப்போடு
அதட்டுகிறாயா,,,
தவறாது தலைக்கவசம்
போட்டுக்ககொள்ள வேண்டுமென்று?
சீக்கிரம்
நம் வீடு வந்து சேர்,,
அத்தையை கேட்டதாய் மறக்காமல்
கூறிவிட்டு!!
கடுமையாய் திட்டக்காத்திருக்கிறேன்,,
உனைக் கட்டி அணைத்து அழுதபடி!!

எழுதியவர் : புதுமை தமிழினி (2-Mar-15, 1:49 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 112

மேலே