கணவன் அமைவதெல்லாம்

தனித்து இரு..
விழித்து இரு..
என்ற உபதேசத்தை
ஏற்று
தியானம் செய்ய அமர்ந்தேன் ..!

தற்கால..நினைவுகள்
ஒன்றன் பின் ஒன்றாய்..
விரட்டப்பட்டு..
பழையன எல்லாம் ஞாபகத்தில்
வந்து போயின..

பத்து ஆண்டுகளுக்கு முன்னால்
இருபது ஆண்டுகளுக்கு முன்னால்
இப்படியே
பிறந்த குழந்தையாய்
அந்த கிராமத்து தாய் சேய் நல விடுதி
ஒன்றில் கிடப்பது நினைவில் வந்தது..
எல்லாம் மங்கலாக..
இன்னும் பின்னாடியே
போக ..
என்ன இது ..
என்னை சுற்றிலும்
எல்லோரும் அழுது கொண்டிருக்க..
நான் ஏன் இப்படி கிடக்கிறேன்..அசையாமல்..
ஒ..இறந்து விட்டேனா..
இன்னும் போகப் போக..
முன் பிறவி..
அதற்கு..முந்தைய பிறவி..
என்று பல பிறவிகள் ..
எல்லாவற்றிலும்
என் உருவம் ஒரே மாதிரியாக இல்லை..
ஒன்றில் சிகப்பாக..
ஒன்றில் ..கருப்பாக
ஒன்றில் அய்யராக ..
ஒன்றில் அய்யனாராக..
ஒன்றில் தேவதூதரின் பக்தராக..
இப்படி..
என் எல்லா பிறவிகளிலும்
ஒரு பெண் மட்டும்
திரும்ப திரும்ப
என் மனைவியாக..
அல்லது காதலியாக..
வந்து கொண்டே இருக்கிறாள்..
ஒ.. அது நீயா..பத்மா..?
..
டங்..
கீழே விழுந்த காலி டம்ளரை
எடுத்தபடி..
பத்மா ..
எதிரில் நிற்கிறாள்..

என்னங்க ..இது
வேலைக்கு போய் வந்து
இப்படி தூங்கிக்கொண்டே இருந்தால்..
எப்போது எழுந்து சமையல்
செய்வீர்கள்..
எழுந்திருங்கள்..

தொலைக்காட்சியில்..
வாணி..ராணி..
என் கலைவாணி அதன்
முன்னே உட்கார்ந்திருக்க
பிறவிகள் தோறும்
எப்படி என்னை பிரியாமல்
என்னோடு வருகிறாள்
என்பது இப்போது புரிந்தது..

உண்மையை சொன்னால்..
பைத்தியம் என்பார்கள்..
ஹூம் ..
கணவன் அமைவதெல்லாம்..
இறைவன் கொடுத்த வரம்!

எழுதியவர் : கருணா (4-Mar-15, 12:31 pm)
பார்வை : 89

மேலே