எனக்கொரு ஆசை

உன் பிடிப்பை
என் விரல்களுக்குள்
உணர ஆசை

நீ வாசல் தாண்டி வெளியே
செல்லும்போது உன் மேல்
வாசனையாக மாறிப்போக ஆசை

என் பெயருடன் உன் பெயர்
இணைத்துப் படிக்கும் போது
இதலோரத்தில் வெட்கத்தின்
மென்மையை உணர ஆசை

உன் பேனா முனையில் என்
வாழ்க்கையை எழுத ஆசை

நம் காதலில் நீ என்னை
தோற்கடிக்க ஆசை

என் திடமான மனது உன் காதலால்
கரைந்து வாயுவாகும் பதங்கமாதல்
நிலையை அடைய ஆசை

என் மனதை நீ
தினமும் திருட ஆசை

இந்த ஆசைகள் எல்லாம்
உனக்குள்ளும் இருக்க ஆசை

எழுதியவர் : Maduradevi (5-Mar-15, 11:29 am)
Tanglish : enakoru aasai
பார்வை : 100

மேலே