அழியாத கோலங்கள்

அவளோடு அருகில் அந்தி வானம் மெல்ல மெல்ல கீழிறங்கி இருள் சூழ்ந்த நேரம் இடைவிடாத காதல் மழையில் இருவரும்,

பேசி பேசி தீர்ந்த வார்த்தைகள் மீண்டும் பேச ஆனந்தம் பொங்கும்,

கண்கள் நான்கும் கல் எறிந்த குளமாய் மாறும்,

விரல்களுக்கு நடுவில் விரல் புகுந்து குழந்தையாய் விளையாடி கொள்ளும்,

குங்கும நெற்றியில் முத்தம் புதைக்கப்படும்,

குயில்கள் கூடி குதுகலிக்கும்,

வண்ண வண்ண மேகங்களே வான் மழை தூவி வாழ்த்து பாடுவீர்களா,

நிலா சற்று நின்று ரசித்து பார் எங்கள் மன குகைக்குள் எறியும் தீபத்தின் ஒளியை,

மலர்களே மெதுவாக மெதுவாக மலருங்கள் நாங்கள் இருவரும் மலர தொடங்கி விட்டோம்,

மான் அதோ புள்ளி மான் கொஞ்சம் அருகில் வா என் தேவதை கோலமிட கொஞ்சம் முதுகை காட்டு,

அதோ பார் யாரும் அற்ற கடற்கரை வா நண்டுகளோடு நாமும் சேர்வோம்,

அலை பிடித்து ஆடைகள் துவைப்போம்,

கப்பல் ஏறி நடு கடல் அடைவோம் நாம் மட்டும் அங்கு தனித்து வசிப்போம்,

உன் கண்ணங்களை நானும் என் கண்ணங்களை நீயும் கிள்ளி கிள்ளி கிலிகள் ஆவோம்,

தத்தை மொழி பேசி தங்க மீன்கள் ஆவோம்,

சிறகு பெற்று வலி மண்டலம் பறப்போம்,

வான் கூரை முட்டி வந்து சேர்வோம்,

வாழ்க்கை என்னவென்று வாழ தெரியாத இந்த மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து தான் பார்ப்போமே ஒரு பூமி நடும் வானம் தொடும் அன்பான வாழ்க்கையை......!

எழுதியவர் : bharathi (5-Mar-15, 1:40 pm)
Tanglish : aliyatha kolangal
பார்வை : 154

மேலே