தென்றலே
நிலா முற்றத்தில் நீ நெடுந்தூர பூமியில் நான்
கண் கொண்டு ரசிக்க கனவுகள் மட்டுமே
வேர் விட்ட ஆசையோ மரமாய் முளைத்தன
சுடர் பட்ட மெழுகாய் இதயம் கசிந்தது
உன் சின்ன கண்ணத்தில் நீராய் வழிந்தது
நடக்கையில் நின்றேன் நான் மட்டும் சிரித்தேன்
வழியில் நீயா வலை வீசி பார்த்தேன்
பிறர் தொடுதல் பட்டாள் சுடுதல் என்றேன்
நீ தூரம் இருந்தும் குளிர்வது கண்டேன்
நிமிடம் ஒருமுறை மரணம் நிகழ்வது பார்த்தேன்
நீ நில் என்றதும் உணர்வுகள் அறிந்தேன்
உன்னை சேராத உதடுகள் உளர் நிலையில்
நீ கடிக்காத கண்ணம் கரும்கல்லாய்
சூடு படாத காது சுமையாய்
நீர் படா நெற்றி பாவமாய்
நீ இல்லா இத்தனை நாட்களில் நான் இல்லா என் உடல் மட்டும் தனியாய்....!