எது சிறந்தது

சாதி மதம் பாராதது
காதல் மட்டுமல்ல
எங்கள் நட்பும் கூட தான்

பாவ பூமியில் ஓடும்
கங்கை நட்பு
கங்கையில் ஓடும்
சிறு படகு காதல்

முள்ளில் மலரும் ரோஜா
நட்பு
ரோஜாவில் விளையும்
நறுமணம் காதல்

ஒன்றை இரண்டாக பிரிப்பது
காதல்
ஒன்றை பத்தாக பகிர்வது
நட்பு

ஆண் பெண் நட்பின்
அடுத்த பகுதி தான் காதல்

கண்டதும் காதல் அது
மெய்யான ஒரு பொய்
புரிந்ததும் வருவது தான் காதல்

கண்டதும் உதிப்பது நட்பு

மழை காதல் எனில்
அதை தூவும் காரிய மேகம்
எங்கள் நட்பு

சொல்லுங்கள் எது சிறந்தது???

எழுதியவர் : நவின் (7-Mar-15, 9:49 pm)
சேர்த்தது : நவின்
Tanglish : ethu siranthathu
பார்வை : 192

மேலே