என்னவனை வர்ணிக்க வார்த்தைகள் தேடி

அவன் இமை மூடும் விதம்
இதமான தென்றல் .
சிரித்து பேசும் அழகு
மெல்லிய இசை .
அணைப்பு அன்னையின்
கதகதப்பு .
முத்தம் பூவிதலின்
வருடல் .
கோபம் தகிக்கும்
நெருப்பு .
கொஞ்சல் நான் ரசிக்கும்
கவிதை .
அப்பப்பா
என்ன ஓர் அழகு
கண்ணன்
பெண்ணை வர்ணிக்க வார்த்தைகள்
கோடி
ஆனால்
என்னவனை வர்ணிக்க அலைகின்றேன்
வார்த்தைகள் தேடி ...!!!!!

எழுதியவர் : கயல்விழி (8-Mar-15, 5:15 pm)
பார்வை : 1282

மேலே