காற்றின் விந்தை

இயற்கையில் பூக்களை வருடி
அளவில்லா அன்பினை சொரிந்து
ஆசையோடு முகர்ந்து
நறுமணம் கொடுத்து
இன்பத்தில் பூக்களை
திளைத்திட வைப்பதும்
இயல் இசை ரீங்காரம்
இயற்றிட செய்வதும்
கண்ணில் தெரியா காற்று தான்
காற்றின் விந்தைகள் பல விதம்
காற்றிலே இழையோடி
கருணை இதழ் விருந்தாகி
கண்கவரும் வண்ணங்களில்
பூக்கள் எல்லாம்
வாசம் என்னும் சுகந்தமதில்
சுற்றி வர சேதி சொல்லும்
சொக்க வைக்கும் மன்மதனும்
உண்மையில் காற்றுதான்
நம்மை எல்லாம் மருள வைக்கும்
கொள்ளை கொள்ளும் பூக்களை
மலர வைத்துப் பார்த்து நிற்கும்
நறுமணத்தில் கலந்து நிற்கும்
காற்றும் அதன் விந்தையும்
எங்கெங்கே எவ்விதத்தில்
உலகம் எல்லாம் உலவி வரும்
காற்று இன்றி உயிர்கள் இல்லை
கடவுள் என்பதன் மறுபெயர் காற்று

எழுதியவர் : பாத்திமா மலர் (9-Mar-15, 5:08 pm)
Tanglish : kaatrin vinthai
பார்வை : 126

மேலே