என்னை பிரியாத காதலி

நீ என்னை
வந்தடைந்தாய்
வேதனையில்லாதவனாய்
முகம் புன்னகைத்தேன்
முதல் சந்திப்பு
என்றால்தானே
அது வருவதற்கு!

*******************
அடிக்கடி
என்னை சந்தித்தே
ஆருயிர்
கதலனாக்கி கொண்டாய் !

*********************
பிரிய மனதில்லாமல்
என் இதயத்திலேயே
முழுவதும்
நிறைந்து கொண்டாய்!

*********************
நான் கண்ணீர்
சிந்த விடாமலே
அதற்கே
கல்லறை கட்டினாய்
என்னை என்றென்றும்
பிரியாதவளாய்!

*********************
நான் உனக்கு
என்ன செய்துவிட்டேன்
உயிராய் காதலித்தே
என்னையே தேடி வருகிறாயே!

*********************
இது எனக்கு கிடைத்த
பாக்கியமோ
இறைவன் உனக்காக
என்னை எழுத வைத்த
வாக்கியமோ
தெரியவில்லை!

*********************

ஆம்
என்னை காதலனாக்கி கொண்ட
தொடர் தோல்வியே
என்னை விட்டு என்றும்
சென்று விடாதே
ஏன் என்றால்
திடீர் வெற்றியை தாங்கும்
இதயம் என்னிடமில்லை !

"""""கவிபுத்திரன்""""

***************************

எழுதியவர் : கவிபுத்திரன் (10-Mar-15, 3:47 pm)
Tanglish : arumai kathali
பார்வை : 217

மேலே