காதல் அகதி

நான்
பைத்தியக்கார ஆஸ்பத்திரியின்
பாதாளச் சிறையில்......

அடிக்கடி
அந்தப்பக்கமாய் வருகிறாய்

சிறைக்குள்
இருந்து அறை கூவல் விடுகிறேன்

பைத்தியக்காரன் என்ற
பரிதாபத்தால்............

ஒரு சில சிரிப்பு சில்லரைகளை
என் மனத் தட்டுகளில் அள்ளி வீசுகிறாய்

அடையாளம்
இல்லாத படி மறைகிறாய்

அன்பு இழந்த
அகதியாய் நான்

எழுதியவர் : கவி. டிலிகுமார் (10-Mar-15, 7:10 pm)
Tanglish : kaadhal agathi
பார்வை : 78

மேலே