ஒளி விளக்கு

உனக்காக ஒரு
உலகம் உண்டு!
வாழ்க்கைத் தேடி
ஓடத்தை செலுத்து!
துடுப்பு ஒன்று
துணைக்கு வரும்!
ஒரு அடி நீ முன் வை!
இருளெல்லாம்
இருபுறமும் இருந்தாலும்
உனக்கு ஒரு
உதவி ஒளியாய் வரும்!
நம்பிக்கை கொள்!
முயன்றால்
முற்றத்தில் விளக்காய்
நிலவையேக் கட்டலாம்!
கடலிலே ஆழ்கடலிலே
கால் பதித்து நிற்கலாம்!
முட்டிக்கால் போட்டு
முகாரி பாடாதே!
ஒளி மயமான
வாழ்க்கைத் தேடி
ஓடத்தை செலுத்து!
துடுப்பு ஒன்று
துணைக்கு வரும்!