மாறியது மனம்

மாறியது மனம்

அது ஒரு அமைதியான குடும்பம்.எதிலும் இனிமையை கண்டு யாவரையும் மகிழச்செய்து மரியாதயையும் மதிப்பையும் பெற்று அந்த பகுதியிலேஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் குடும்பம்.
குடும்ப தலைவர் சிதம்பரம் ஒரு மருந்து நிருவனத்தின் பொது மேலாளர்.மனைவி விமலா ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியை.
மகள் ஸ்வேதா முதுநிலை படிப்பை முடித்து விட்டு அதே கல்லூரில் பணியில் இருக்கும் ஒரு உதவி ஆசிரியை.மகன் கௌதம் பொறியியல் கடைசி ஆண்டு மாணவன்.
நம்கதை இவர்களை மையமாக கொண்டு இயங்குவது.

சிதம்பரமும்,விமலாவும் மகளுக்கு திருமணம் செய்ய உண்டான ஆயத்தங்களில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கிய நாட்கள்.
தெரிந்தவர்களிடமும்,நண்பர்களிடமும்,,தன் நிறுவனத்திலும் மிகவும் நெருக்கமானவரிடமும் தன் மகளுக்கு பொருத்தமான பையன் எவரேனும் இருந்தால் தெரிவிக்குமாறு கூறினார்.விமலாவும் அவள் நண்பர்களிடம் ஸ்வேதாவை பற்றி பேசி அவர்கள் உதவியை நாடினாள்.

சிதம்பரம் வழக்கம் போல் பணிக்கு செல்ல ஆயத்தம் செய்து கொண்டிருந்த ஒரு நாள் காலை அழைப்பு மணி சிலுசிலுக்க
யார் காலையிலே நம்வீட்டின் விருந்தாளி என வியந்து கொண்டு கதவை திறக்க தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர் நிற்பதை கண்டார்.
ஒரு நிமிடம் தன்நிலை மறந்து பின் அவரை வியப்பு கலந்த பெரும் குரலில்
சிவா நீயா எவ்வளவு நாட்கள் ஆச்சு உன்னை பார்த்து
என ஆச்சரியம் பொங்க வா வா என அழைத்து அணைத்துக்கொண்டு உள்ளே கூட்டி சென்றார்.
மனைவி,மகள் மற்றும் மகனிடம் சிவாவை அறிமுகபடுத்தினார்.சிவாவை பற்றி சிறிது கூறிய பின் அவர்களை அன்று சற்று தாமதமாகவோ,அல்லது மதியம் சாப்பாட்டிற்கு பின்னரோ பணிக்கு செல்லுமாரு கூறினார்.
மனைவியை மதிய உணவிற்காணவற்றை செய்ய பணித்துவிட்டு நண்பரிடம் பழைய கால
நினைவுகளை பகிர்ந்து கொள்ள ஆயத்தமானார்.தன் அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு
கொண்டு தான் தாமதமாக வருவதை தெரிய படுத்தினார்.
பின் இரு நண்பர்களும் தம் வாழ்வின் நிகழ்வுகளை அசைபோட துவங்கினர்.
சிவா தானும் தன் மனைவியும் தங்கள் மகனுடன் வெளிநாட்டில் காலம் கழிப்பதாகவும் ஆறுமாதத்திற்கு ஒருமுறை இந்தியாவிற்கு வந்து செல்வதாகவும் கூறினார்.
தன் மகனுக்கு இம்முறை மணம்செய்ய பெரும் முயற்சியில் இருப்பதாகவும் கூறினார்.
அந்த நேரம் ஸ்வேதா காப்பியுடன் அங்கு வர சிவா கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைவதுபோல் என்று நினைத்து
ஏய் சிதம்பரம் உன் பெண்ணை எனக்கு மருமகளாக தருவாயா என
பட்டென்று கேட்க, சிதம்பரம் எதிர்பாராத இக்கேள்வியால் தாக்கப்பட்டு ஒருநிமிடம் திகைத்து பின் தன்நிலைக்கு வந்து ஆனந்தமும் ஆச்சரியமும் கலந்த ஒரு உணர்வில் மனைவியையும்
மகளையும் அழைத்து செய்தியை கூற,இருவரும் மவுனமாக தங்கள் சம்மதத்தை தெரிவிக்க அந்த இடத்தில் ஒரு இன்பமயமான சூழ்நிலை உருவானது.
சிதம்பரம் தாம் வேண்டும் இறைவன்தான் இந்த சம்மந்தத்தை கொடுத்திருக்கிறான் என்று மனமார வேண்டிக்கொண்டு சிவாவிடம் உரிமையுடன் அவன் பிள்ளையை பற்றி வினவ
சிவா தன்மகன் வெளிநாட்டில் டாக்டர் பட்டம் பெற்ற பின் ஒரு அமெரிக்க வங்கியில் தலைமைபதவியில் இருப்பதாக கூறினார்.
அவன் இன்னும் ஒருமாதத்தில் இந்தியா வருவதாகவும் கல்யாணத்ததை அப்பொழுது நடத்தலாம் என்றும் கூறினார்.
சிதம்பரத்திற்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை.ஒரு மணிநேரத்தில் நடந்து முடிந்த இந்த கல்யாண பேச்சு அவருக்கு ஒரு ஆனந்தம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது.
சிவாகூறிய இன்னொரு வாக்கியம் கல்யாண செலவுகளில் பாதி என் கணக்கு என்பது சிதம்பரத்தை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.
மனைவியிடம் சிவா கூறியதை எடுத்து சொல்லுகையில் முகமும் மனமும் மலர்ந்து ஒரு இனம்புரியாத உணர்ச்சியில் கண்கள் கலங்கின.
சிவாவை மதிய உணவிற்கு அழைத்தபோது மகனின் புகைபடம் ஒன்றை கேட்க நினைத்தார்.சிவா அதற்குள் தன்மகனின் கனினியில் உள்ள முகபுத்தகத்தை மகன் கௌதமிடம் கூற
ஸ்வேதாவுடன் கௌதம் கனினிஇருக்கும் இடத்திற்கு விரைவதை
கண்டார்.உலகம் எவ்வளவு முன்னேறியுள்ளது நாம் புகைபடம்கேட்க
எண்ணியதை நினைத்து சிரித்துகொண்டார்.
சிவாவுடன் பகல் உணவை கழித்துவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு தன் அலுவுலகத்திற்கு காரை ஓட்டி சென்றார்.
வீட்டில் தாயும் குழந்தைகளும் குதூகலத்துடன் காலை நடந்தவற்றை நினைத்து புண்ணகையுடன் அவரவர் வேலைக்கு செல்ல ஆயத்தமாயினர்.மாலையில் சிதம்பரம் மிக உற்சாகத்துடன் வீட்டில் நுழைந்தார்.
மனைவியிடமும் மக்களிடமும் நாளை மறுதினம் எல்லோரும் காஞ்சீபுரம் சென்று சேலை எடுக்கலாம் என கூற,விமலாவும் ஸ்வேதாவும் சென்னையிலேயே நகை மற்றும் சேலைகளை எடுக்கலாம் என வாதிக்க மகளிர் கட்சிதான் வென்றது.
அடுத்த இரண்டு நாட்களும் திருமணத்தின் வேலைகளை நால்வருடைய பார்வையிலும் அலசிவிட்டு யார் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஒரு பட்டியல் உருவாக்க பட்டது.

மூன்றாம்நாள் காலை ஒரு வாடகை காரில் சென்னை செல்ல எல்லோரும் புறப்பட்டனர்.

சிதம்பரம் முதலில் நகைகடைக்கு செல்ல பணிக்க கார் ஒரு பிரபலமான நகைகடைக்கு முன்சென்று யாவரையும் இறக்கிவிட,தம்பதியர் குடும்பமாக உள்ளே நுழைந்தனர்.
என்ன ஒரு கூட்டம்,எங்கு நோக்கினாலும் மக்கள் தலைகள் அலைபோல் உள்ள கூட்டத்தில் மெதுவாக தாண்டி ஒரு விற்பனையாளரிடம் வருவதற்குள் சிதம்பரத்திற்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது.மகளிர் இருவரும் சில நகைகளை எடுத்து பார்க்க,பின் கழுத்தில் வைத்து பார்க்க விற்பனையாளரின் பொறுமை சிதம்பரத்தை வியக்க வைத்தது.
ஸ்வேதா நகைகளை கழுத்தில் வைத்து காட்டும் போது கண்களால் வேண்டும் வேண்டாம் என்பதை சிதம்பரம் தெரிவிக்க அங்கு ஒரு ஊமைப்படமே அறங்கேறியது.
பின் ஒரு மனதுடன் எல்லாநகைகளையும் வாங்கியதும்,மாங்கல்யத்திற்கான தங்கத்தையும் தேர்வு செய்தனர்.
விற்பனையாளரின் அவர்களிடம் ரசீதை கொடுத்து அதற்கு உண்டான பணத்தை செலுத்துமாறு பணித்தார். பணத்தைசெலுத்தி விட்டு கைபேசியில் கார் ஓட்டுனரை அழைக்க ,கார் வந்ததும் எல்லோரும் துணி கடைக்கு செல்ல முடிவு செய்து பிரபலமான கடையில் இறக்க
பட்டனர்.
திருவிழா கோலத்துடன் காணப்பட்ட அந்த கடையில் நுழைந்ததும் சிதம்பரம் தன் மகளிடம் உனக்கு பிடித்தவை எல்லாம் எடுத்துக்கொள் என கூறினார்.மகளும் மனைவியும் இணைந்து செயல்படும் காட்சி கண்ணுக்கு விருந்தாகியது.
பின் காரில் பொருள் அணைத்தையும் வைத்துவிட்டு ஸ்வேதாவிற்கு பிடித்தமான சிற்றுண்டி பவனில் கால்பதித்தனர்.
நன்றாக உண்டபின் மீண்டும் கார் பயணம்,தட்டானை நேரில் காண விழைந்து அவன் வீட்டில் கார் நின்றது,வீட்டில் அவர்இல்லாததால் சிறிது ஏமாற்றம் அடைந்து பயணம் தொடர்ந்தது.
வீடு வந்து சேர இரவு நேரமாகிவிட்டது.பயணகளைப்பில் எல்லா பைகளையும் ஒன்றுசேர வைத்துவிட்டு ஓட்டுனருக்கு நன்றி கூறி எல்லோரும் படுக்க சென்றனர்.
காலையில் சிதம்பரம் மகளை அழைத்து நகை மற்றும் புடவைகளை காண வேண்டும் என கூற மகள் ஆவலுடன் பைகளை கொண்டு வந்தாள்.எல்லா பைகளும் பிரிக்க பட்டு சேலைகளையும் மற்றும் நகைகளையும் பார்க்க முற்பட்ட வேளை நகைவைத்த பையில் இலவசமாக கொடுக்கபட்ட சிறிய பயணப்பை மட்டும் தான் இருந்தது.நகைவைத்த சிறுபெட்டியும் தாலிக்கு வாங்கிய தனி
தங்கமும் காணவில்லை.

மீண்டும் எல்லாஇடமும் தேடியபின்,கிடைக்காமல் மனம் கலவரமடைய சிதம்பரம் சோர்வடைந்து மகளையும்,மனைவியையும் பார்த்து செய்வதறியாமல் தன்நிலை இழந்து கட்டுப்பாடு இன்றி,என்ன சோதனை இது என குமுற,மகளிடம் கவனமாக இருக்ககூடாதா இப்பொழுது எங்கே
தேடுவது,என கோபிக்க மகள் தன்னை குற்றமாக்கி விட்டாரே எல்லோரும் தானேஇருந்தோம் என பதில் உரைக்க அவ்விடம் கோபமும்,சோகமும் சேர்ந்த இறுக்கமான இடமாகி களை இழந்தது.
மகனும்,மகளும் சேர்ந்து அப்பாவிடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார்செய்ய செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றனர்.
மனைவியிடம் சிதம்பரம் தனிமையில் அழுகைகலந்த புலம்பலுடன் தன்னை இழந்தார்.கணவனை இந்தநிலையில் பார்த்தறியாத அவள் செய்வதறியாது தவித்தார்.
மக்கள் இருவரும் வந்தவுடன் சிதம்பரம் வாடகை வண்டி அனுப்பிய கார் வாடகை ஸ்தாபனத்தை தொலைபேசியில் அழைத்தார்.
கார்ஓட்டுனரின் பெயர் சொல்லி அவனை அழைக்குமாறு பணிந்தார் சிறிது தாமதத்தின் பின் அவர்கள் அந்த ஓட்டுனர் வெளியூர் பயணம் சென்றுள்ளதாகவும் வருவதற்கு பத்து நாட்கள் ஆகும் என்றும் கூறினர்.
சிதம்பரம் மீண்டும் அமைதி இழந்தார்.என்ன சோதனை இது என்று தெய்வத்தை மீண்டும் நினைத்து மனம் வருந்தினார்.

சிதம்பரம் குடும்பத்தை இறக்கிவிட்ட பின் கார் ஓட்டுனர் காரை தன்வீட்டிற்கு செலுத்தினார்.காரை வீட்டில் நிறுத்தி காரின் உள்ளே துணிகொண்டு துடைக்கும் போது ஒரு பை காரின் சீட்டின் ஓரத்தில் இருப்பதை கண்டு அதை கையில் எடுக்க அது கனமாக இருந்தது.
பிரித்து பார்க்கையில் உள்ளே நகையும்,தங்கத்தையும் கண்டு மனம்
பதைத்தார். சிதம்பரமும் அவர்குடும்பமும் பயணம் செய்ததை நினைவு கூர்ந்தார்.
மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.இப்பொழுது
சிதம்பரம் குடும்பம் எவ்வாறு வேதனையில் தவிக்குமோ என நினைக்க,இன்னொரு எண்ணம் அதை தடுக்க ஒரு மனபோராட்டம்.
பின் ஒரு சிறிய சிரிப்புடன் கடவுள் நமக்கு வழிகாட்டியுள்ளார்.ஊர் சென்று வந்ததும் இதை வைத்து காரின் கடன் அடைக்க வழி செய்யலாம் என எண்ணி பையை பத்திரமாக உள்ளே பீரோவில் வைத்து பூட்டினார்.
மறுநாள் ஸ்தாபனத்தில் தான் வெளியூர் செல்வதை அறிவித்து விட்டு வட நாட்டு பயணிகளுடன் தென்நாட்டை காட்டுவதற்காக
காரை செலுத்தினார்.
திருச்சி,பழனி,ஊட்டி,குற்றாலம்,நெல்லை எல்லா இடங்களுக்கும் காரை செலுத்தினார்.ஊர்களையும்,கோவில்களையும் கண்டபின் கன்னியாகுமரியை வந்து அடைந்தார்.கன்னியாகுமரியின் எழிலை கண்டுகளித்த பின் விவேகானந்தர் பாறையும் கடல் சங்கமமும் மாலை கதிரவனின் அஸ்தமனமும் கண்டு அந்த வடநாட்டு பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அடுத்த நாள் காலை யாவரும் கோவில் செல்ல எண்ணி ஓட்டுனரையும் வற்புறுத்தி அழைக்க அவர்களுடன் அம்மனைக்காண அவரும் சென்றார்.
அம்மன் தவத்திரு கோலம் கண்கொள்ளா காட்சியாக கண்முன் நிற்க ஓட்டுனர் தன்னை மறந்தார்.அம்மன் அவரை பார்த்து எள்ளி நகைப்பதுபோல்,ஒரு எண்ணம் உன் உள்ளம் இவ்வளவு சிறியதா என கூறுவதுபோல் தோன்றியது.

மனதில் அப்பொழுது ஒரு கலக்கம்,மீண்டும் போராட்டம்,அதை தடுக்க முயற்சிக்கையில் வேகமாக அது வளர்ந்தது.மனம் நிலைஇல்லாமல் தவிக்க மீண்டும் அம்மன் சிலையை அவர் நோக்க மனம் மாறுவதை உணர்ந்தார்.அமைதியான சூழ்நிலையும் அம்மன் தரிசனமும் தான் தன்மனத்தை நிலைப்படுத்தியது என உணர்ந்தார்.
பயணம் முடிந்ததும் நேரே வீட்டில் உள்ள நகைகளையும் தங்கத்தையும் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு எடுக்க மனம் நிம்மதி அடைந்ததை உணர்ந்தார்.அம்மனை வேண்டி
தன்செயலை எண்ணி நாணம் கொண்டு மனம் வருந்தினார்.பயணிகளை நன்றியுடன் பார்த்து பயணத்திற்கு ஆயத்தமானார்.
வீடுவந்ததும் முதலில் நகைகளை எடுத்துக்கொண்டு சிதம்பரத்தின் வீட்டிற்கு புறப்பட்டார்.
சிதம்பரம் வீட்டை அடைந்ததும் காரை நிறுத்தி அழைப்புமணியை அழுத்த, சிதம்பரம் கதவை திறக்க ஓட்டுனருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.இவ்வளவு நாள் கவலையும் சோகமும் அவரை முழுவதும் மாற்றி இருந்தது.மிகவும் வயதான ஒரு தோற்றம்.ஓட்டுனர் தான் கொண்டு வந்த பையை கொடுத்து தான் தாமதமாக வந்த காரணத்தையும் தெருவிக்க,சிதம்பரத்தின் கைகள் தன்கையை பற்றிக்கொண்டு நிற்பதையும் கண்கள் நன்றியுடன் கண்ணீர் சொறிவதையும் கண்டு திகைத்து, தன் செயலினால் விளைந்த நண்மையை எண்ணி பெருமிதம் அடைந்தார்.
கண்ணீரினால் சிதம்பரம் கூறும் நன்றியில்
வார்த்தைகளுக்கு இடமின்றி போனது.......

எழுதியவர் : ராம் (12-Mar-15, 1:11 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : maariyathu manam
பார்வை : 307

மேலே