காதல் பயணம்

சூரியனின் துகள் எடுத்து தூண் செய்வேனே
அது சூரியன் முதல் புளூட்டோ வரை நீண்டிருக்குமே
அதன் மேல் நம் காதல் பயணம் செய்யத்தான்.
கடலின் ஆழம் தொட்டு என் காதல் வைப்பேனே
உன் காலியான இதயத்தில் நான் இருக்கத்தான் மிதந்தும் வருவேனே.
வாடாத மலரில் இருந்து வரும் வாசனைக்கு காத்திருக்கேனே
தினமும் என் உயிர் நீர் ஊற்றி உன்னை காப்பேனே
காதலை மறுக்கும் உன் நெஞ்சமே மாறக்கூடாதா.
காக்கையின் நிறம் எடுத்து காந்தம் செய்வேனே
அதை என் கருவிழியில் பொருத்தி கொண்டு உன்னை இழுப்பேனே
அப்போதும் உன் கண்கள் என்னை பார்க்காதா.
உயிரோடு இருக்கும் வரை உன் மடியோடு இருக்கிறேன்
கட்டி அனைக்கக்கூடாதா.
தினம் உன் நெஞ்சில் குடியிருக்க என் காதல் நெஞ்சம் என்றும்காத்திருக்கே
ஓடி வந்து அனைத்திடு ஓர் உயிர் காத்திருக்கு......

எழுதியவர் : ஆ.சத்தியபிரபு (12-Mar-15, 9:15 pm)
சேர்த்தது : ஆசத்தியபிரபு
Tanglish : kaadhal payanam
பார்வை : 106

மேலே