உலகத் தண்ணீர் தினம் --- மரபுக் கவிதை நிலைமண்டில ஆசிரியப்பா

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் --- தலைப்பு

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் .
நீரலைகள் நிறைத்துவிடும் நெஞ்சார்ந்த நினைவலைகள் .
தாய்வயிற்றின் பனிக்குடமே ! தாய்மார்பின் பாலூற்றே !
வெண்மேகம் தருகின்ற வெள்ளிநீர் அமுதமே !
பூமிசெய்த புண்ணியமே ! பொய்த்துவிடா அற்புதமே !
நீரின்றி உலகுண்டோ ? நிலமின்றி நாமுண்டோ ?
விளைநிலத்தின் விடிவெள்ளி ! விவசாயியின் நற்கருணை !
உயிர்த்தாகம் போக்குகின்ற உலகத்தின் அருமருந்தே 1
விருந்தாக வருபவரை வரவேற்கும் தண்ணீரே !
விலைக்கு வாங்கும் விபரீதம் இனிவேண்டா !
பசித்தோரின் தாகமதைப் பொறுத்திடுதல் உண்டிங்கே !
தண்ணீரின் தாகமதுத் தவிக்கவிடும் மண்ணுலகை .
எத்திக்கும் பொழிகின்ற எங்கள்உயிர் நன்நீரே !
நிலத்தோடு நீர்சேர்த்து நதிகளிலே நனைந்திடுவீர் !
வளமான வசந்தகாலம் வாழ்க்கைக்குத் தந்திடுவீர் !
வருகின்ற சந்ததிக்கு வரமாகி நிற்பீரே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Mar-15, 10:27 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 89

மேலே