ஆண்மையின் சூடு
அந்த நீல கடல்
அலையில்
ஓராயிரம் குமிழ்களடி
அவ் அலை தன் தலைமேல் தொடுத்திருந்ததோ கலையாத கர்வம்....
கர்வம் கலையா அலைதனில் ,
அழிவதந்த ஓராயிரம் குமிழ்களடி...
இப் பொது விதியை
புத்தி சொல்ல துவங்கிய சமயமதில்,
தூரத்தில் உதித்த ஓர் குமிழ்
உடையாது நகர்ந்ததுணர்ந்தேன்..
உயர்ந்த அலைக்கு,
விலையாகாது நின்ற அதன் ஆண்மைக்கு எத்துனை சூடு...
விரிந்த கருங்கடல் ஆணவத்திற்கோர்,
ஓர் வரி வினா?
அச் சிறு குமிழின் இருமாப்பை என் செய்வாய்?