நீ வேண்டும்
ஊடல்களின்
நிர்வாணங்களை
போர்த்தும்_என்
கெஞ்சுதல்களோடு!
உன் விரல்களை
வருடிக்கொண்டே
முடிவுகளுக்கு
அப்பாலும் தொடரும்
ஓர் கடற்கரை
பயணம் போதும்!!
புனைவுகளின்
முதுகுத்தண்டை
கிழித்துக்கொண்டு
மெய்ப்பியலோடு
வீசும் உன்
புன்னகையின்
பிரகாசத்தில்
கரைந்துவிடும்
ஓர் இராத்திரியில்
நம் தனிமை போதும்!!
சூட்சுமங்களால்
நிறைந்துவழியும்
உன் மோகன
பார்வையின்
இரகசியத்திடம்
மண்டியிடும்_என்
அதரங்களை
பட்டைதீட்ட நம்
பருவ பொழுதொன்று
போதும்!!
உன்னை
சுமந்துகொண்டு
எனக்குள்
தனித்திருக்கும்
காதலின்
சுவாசம் போதும்!
ஆயிரம்
கவிதைகளை
அறுத்தெறிய!
தெருவொன்றில்
அதிவேகத்தில்
இறுக்க அணைத்தபடி
உந்துருளியில்
பயணிக்கும்
காதலர்களில்
ஆயுள் வரை
எனக்குள் நீ
வாழ்ந்துவிட்டு
போகிறாய்!!
ரணங்களில்
தோய்ந்தபடி
அதிலிருந்தும்
கவியொன்று
எழுகிறது!!
அதற்கு என்
தனிமை போதாது...