அவனுக்கும் அவளுக்கும்

பூ விற்கும் அவனுக்கும்-ஒரு
பூவிற்கும் ஏதோ ஒன்று.

பூக்களை கட்டும் அவனை-அந்த
பூ கட்டுகிறது.

எல்லாரும் கை நீட்டி காசு தர
அவள் கூந்தல் காட்டி பூக்களை
கேட்கிறாள்.

பூக்கட்டும் பூக்கட்டுமென
பூக்கிறது காதல்.

பூக்கடைத் தெருவில்
நான்காவது கடையில்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (15-Mar-15, 4:02 pm)
Tanglish : avanukum avalukum
பார்வை : 123

மேலே