கோட்டோவிய மழலைகள்- 11 கவிபுத்திரன்

பெற்றோா் பள்ளியில்
விடுகையில
கீழ்சாதி பிள்ளையோடு
ஒரு போதும் சேராதே
என பிஞ்சு மனதில்
நஞ்சு விதைச்சப்போ
மழலை மனம்
என்னென்ன
நினைச்சிருக்கும்
அனல் புழுவாய்
துடிச்சிருக்கும்!

*********************
பள்ளியில் விட்டு சென்றதுமே
நஞ்சையும் பஞ்சாய்
உதிா்த்துவிட்டு
மழலை சிறகை
பறக்கவிட்டு
இன்னும் அதிகமாய்
மழலைகளோடு
கொஞ்சி விளைாட
தூண்டிய நேரம் அது!

*******************
மதிய உணவு
இடைவேளையில
தான் கொண்டு வந்த
தக்காளி சாதமும்
பாத்திமா கொண்டு வந்த
பால் பாயாசமும்
மோி கொண்டு வந்த
மோர்க்குழம்பும்
பகிா்ந்து உண்டப்போ
அப்பப்பா......
அமிா்தமாய் இருந்ததையா
ஜாதி மத வேறுபாடே
தொியும் உங்களுக்கு
அந்த ருசி
எப்படி தொியுமைய்யா?

*********************
மறுநாள் காலையில
டிபன் பாக்ஸை
கழுவும் போது
பகிா்ந்துண்டதை
அம்மாவும் கண்டுபுடிச்சா
காலிலேயே
நாலு அடி அடிச்சா
ஓ...
டிபன் பாக்ஸ்
மாறிப்போச்சே
கண்ணீரை விரலால
துடைத்துவிட்டு
ஒரு கேள்வியும் மனதில்
தொடுத்து விட்டு

************************
அம்மா
அவா்களும்
என்னைப் போல
கருவறை குழந்தைதானே ?
எனச் சொல்லியே
அமைதியாக
நகா்ந்து சென்றாள்
அந்த அழகு மழலை!

எழுதியவர் : கவிபுத்திரன் சபியுல்லா (15-Mar-15, 8:10 pm)
பார்வை : 303

சிறந்த கவிதைகள்

மேலே