என் அனுபவம்

தேடித் தொலைந்து போனேன்
எதிர்பார்த்து ஏமாந்து போனேன்
நேசித்து நொடிந்து போனேன்
என்னடா வாழ்க்கை என்றேன்
இனி எப்போதும் இறக்க துணிந்தேன்
போதி மரம் தேவையில்லை
நான் புத்தனாக போவதுமில்லை
துறப்பதற்கு ஒன்றும் இல்லை
துறவுகொள்ள போவதில் அர்த்தமில்லை
சிறுபிள்ளையாய் அழுது பார்த்தேன்
கேட்டது எதையும் தரவில்லை
அன்பாய் அழைத்து பார்த்தேன்
அவன் என்றும் வரவேயில்லை
கடன் வாங்கி காணிக்கைப் போட்டேன்
கண் திறந்து பார்க்கவே இல்லை
கண்ணீர் சிந்தி கல்லும் கரைந்திட
கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்
கருணையின்றி தருகிறான் இடர் !

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (16-Mar-15, 9:27 am)
Tanglish : en anupavam
பார்வை : 305

மேலே