கேடயம்

நான் சொல்வதை கேட்பதற்கெல்லாம்,
உனக்கேது நேரமும் காலமும் !
என அடிக்கடி நீ கூறும் வார்த்தைகள்,
என்றிருந்து உன் கேடயமாகியது?
என்பதனை நானறியேன்,
எனக்கான உருவகமே !
எனினும் இன்றிலிருந்தே,
நீ தும்மினால் துருவி விசாரிக்கவேண்டும் !
பெருமூச்சுவிட்டால் பெரிதாய் யோசிக்கவேண்டும் !
என்றெல்லாம் என்றெல்லாம் யோசிக்கிறது மதி !
என்றபோதும்,
ஒவ்வொருமுறையும் அதன் முடிவு,
அரிதாரம் பூச மறுக்கிறது !
எனவே என்னவளே !
தயாராகவே இருக்கட்டும் உன் கற்பனை கேடயங்கள் !
உன் இதயம் தடவி இனிமை சேர்க்க,
பயன்பட பாயும் எனது கூர்வாள் மயிலிறகாய் இருக்கட்டும் !!

எழுதியவர் : பாரத்கண்ணன் (18-Mar-15, 9:48 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 46

மேலே