மழலைகள்
போதி மரம் அடையா
ஞானம் அடைந்த லாபிங் புத்தர்கள்
அன்னையை அழைக்க மட்டும்
தனி ராக மொழியில் அழும் சித்தர்கள்...
தத்தி தவழும் குட்டி கடவுள்கள்
விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதில்
சார்லி சாப்ளினுக்கு மூத்தோர்கள்.
பின் லேடனே எதிரே இருந்தாலும்
கை தட்டி அழைத்து விளையாடவைப்பதில் கில்லாடிகள்.
தூங்குவதில் கும்பகர்ணனுக்கு இணையானவர்கள்
பாதி தின்ற பிஸ்கட் துண்டுகளை
பொம்மைகளுக்கு கொடுப்பதில் கர்ணனுக்கு மேலானவர்கள்!!!