ஆயும் சேயும்
கருவறைக்குள் இருந்த போது
உனைக்காண துடித்திருந்தேனே
அதனால் தான் இன்று உன் கண்
இமைக்குள் காக்கின்றாயா எனை
எப்படி உன்னால் மட்டும் முடிகிறது
இப்படி அன்பை வாரி வழங்க
உன் அன்புக்கு இத் தரணியை
விலை பேசினாலும் ஈடாகுமா என்ன??
யாவுமே அடைக்கலம் உன்
களங்கமில்லா பேரன்புக்கு
நீ உன் சேய்க்காக செய்வன
எல்லாம் ஏராளம் ஏராளம்
நான் அப்படி என்ன செய்தேன்
உனக்காக தெரியவில்லையே எனக்கு
எதற்காக இப்படி உன்னையே
உருக்குகிறாய் எனக்காக
நீ எனை ஈன்ற போது பெருமை
கொண்டாயோ? இல்லையோ?
ஆனால்
நான் பெருமிதம் கொள்கிறேன்
உன் பரிசம் பட்ட அந்த
சில நொடிப் பொழுதினிலே
ஏழேழு ஜென்மங்களையும் வென்று விட்டேன் என்ற வீராப்பிலே...........
எனது முதல் படைப்பு தவறுகள் இருப்பின் மன்னித்து வழிப்படுத்துங்கள்.