காதலின் ஆழம்-பாடல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

அன்னை முகம் கண்டதில்லை
உன் முகம் என்றிருந்தேன்
பாச அலையில் நீந்தலையே....!
உன்னை எண்ணி நான் கரைந்தேன்.

உன் மடியில் துயில எண்ணி
என் விழிகள் விழித்துக் கொண்டேன்.
உன் கண்ணில் மலரனுமே....!
என் கண்ணீரில் பயிர் விளைத்தேன்.

உன்னைக் கண்ட நொடிமுதல்
என் உள்ளம் தவியாய் தவிக்குதடி
உண்ணும் உணவில் சுவையில்லையே
கம்பன் கவியிலும் நயமில்லையே

என்னோடு பேசம்மா....!
என் நெஞ்சு வலிக்குதடீ..!
என் இதயம் எனதல்ல உன்னை
நினைத்து வாழும் ஓருயிர் நான்.

என் குறை கருமையடீ....!
அதனால் என்னை வெறுக்கயாம்மா..!
என் மனைவி நீயாகினால்....!
தாலாட்டுவேன் என் உயிரால்.....!

உன் சம்மதம் ஒரு சொல்லில்
வாழ ஏங்கும் பறவை ரெண்டு....!
என் ஆசை இதானாம்மா..,உன் மடியில்
இறக்கணும்....,உன் மார்பில் அணைக்கனுமே...!!

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (24-Mar-15, 12:20 am)
Tanglish : kathalin aazham
பார்வை : 174

மேலே