உலகம் செவ்வகம்

நான்குக்கு
மூன்றடிச் செவ்வகம் -
கண்வழி
கவிதைகள் உலாத்தும் -

கருந்தார்
மலைப் பாம்பு
தினம் விழுங்கும்
கனவு சுமந்த
நர்த்தன மேளங்கள்
செவிப்பறை தாக்கும் -

வண்ணம்
தொலைத்த
அவசரங்களின்
ஆரவார மூச்சிரைப்பை
அம்பலமாக்கும் -

கொஞ்சு
மொழிக் கிளிகளும்
ஆமை முயல் கதைகளும்
அன்றாடம் அரங்கேறும் -

அஸ்தமன
சிவப்பு அரிதாரம்
களைய செல்லரித்த
கருப்புத்திரை மெல்லமூடும்-

சக்கரக் கால்கள்
ஆறுக்கு மூன்றடி
மேடைக்கு எனை
இட்டுச் செல்லும்வரை
இந்த நான்குக்கு
மூன்றடிச் செவ்வகம்தான்-
என் உலகம் !

எழுதியவர் : ஜி ராஜன் (24-Mar-15, 2:12 pm)
பார்வை : 176

மேலே