காமத்துப் பால் கவிதை 1

"மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன் "
(நிலவிற்கும் அவளது முகத்திற்கும் வேற்றுமை தெரியாமல்
வானில் வின் மீன்கள் அலைகின்றன என்பது இதன் பொருள் )

சூரியனும் பகுதியாய்
இறந்துவிட்ட
வானில் அன்று சாலை நெரிசல்
விண்மீன்களின் கூச்சல்
என் தூக்கத்தை கலைத்தது

வழி தவறியதும் எனோ
நீங்கள்?
என்
கேள்விகள் தெறிக்க
மீன்கள் மின்னின

பூமியில் புதிதாய்
ஒரு மதி ............,
அதன் பிரகாசம்
அழைக்கவே
இதோ எங்களின்
மண்னகப் பயணம்
மீன்கள் இவ்வாறு!

என் குழப்பமும்
மறைந்தது
இப்பொழுது தான்
அவள் தெருவை
கடந்து செல்கிறாள்

எழுதியவர் : haathim (24-Mar-15, 2:45 pm)
பார்வை : 156

மேலே