வெளிநாட்டு வாழ்க்கை
சில லட்சியங்களுக்காகவும்
பல லட்சங்களுக்காகவும்
வெளிநாட்டு வாழ்க்கை
என்ற பெயரில் இங்கு
அடகு வைக்கப்படுவது
பயண காசுக்கு தேவையான
நிலமோ நகைகளோ மட்டுமல்ல
நேசமும் பாசமும் தான்
தூரமாவது தொலைவு
மட்டுமல்ல
இவை எல்லாமும்தான்
அம்மாவின் சமையல் வாசம்
அப்பாவின் அதட்டல் சத்தம்
கொண்டவளின் அனுசரணையின் இதம்
மழலையின் முத்தம் முதல்மொழி
ஊர் திருவிழா தேரோட்டம்
சொந்தக்கார திருமண ஆர்பரிப்புகள்
பாட்டியின் இறுதி நிமடங்கள்
நம்மூரு மண்வாசம் காத்து
எதிர்வீட்டு சண்டை சத்தம்
நம்மில் கலந்துபோன நம் மொழி
இதயங்களின் ஈரத்தை
ஓரம் கட்டி வைத்து
இதயத்தை இறும்பாய்
இறுக்கி கொண்டே
ஆரம்பிக்கறது இந்த
வெளிநாட்டு பயணங்கள்
நினைத்தவுடன் குரல் கேட்க
தொலைபேசி இருக்குது
நினைத்தவுடன் முகம் பார்க்க
கணினி இருக்குது
நினைத்தவுடன் பறந்து வர
விமானம் இருக்குது
ஆனால்
விடுமுறை இல்லையே
வசதிக்காக வாழ்க்கையை
தொலைத்து(தள்ளிவைத்து) விட்டு
தொலைபேசியில் தினமும்
நல்லாயிருக்கேன் என்ற
பொய்யையும் தவறாமல்
சொல்லிவிட்டு தூங்கபோகிற
ஆண்பாவங்கள் எத்தனை?