பொங்கல் உணவாம் புலி
(பூட்டு விற்பொருள்கோள்)(கடைமாற்று)
மான் தின்னு மானை கரும்புதின்னும் நீந்தும்மீன்
மீன் தின்னு மேபசும்புல் மேயுமாடு ஊன் தின்னும்
சிங்கமோ பேன்பொறுக்கி மந்திதின்னும் எங்களுக்கு
பொங்கல் உணவாம் புலி
இதன் பொருள்
புலி மான் தின்னும்
ஆனை கரும்புதின்னும்
நீந்தும்மீன் மீன் தின்னு மே
பசும்புல் மேயு மாடு
ஊன் தின்னும் சிங்கமோ
பேன்பொறுக்கி மந்திதின்னும்
எங்களுக்கு பொங்கல் உணவாம்