குப்பையில்லா குப்பைத்தொட்டிகள்

இராவை இரவல் வாங்கிய -சில
எச்சங்களின் மிச்சங்களாய் வந்த
மழலைகளுக்கு தாலாட்டுப்பாடும் தாய்மடியாய் !!!

எச்சமோ இல்லை மிச்சமோ
தேடிவரும் பலஉயிர்களுக்கு
அன்னமிடும் அட்சயப்பாத்திரமாய் !!!

ஊரைச்சுத்தமாக்க
தன்னை அசுத்தமாக்கும்
உயர்ந்த உள்ளமாய் !!!

கோடியில் புரள்பவனையும்
தெருக்கோடியில் நின்று
குத்திக்கிழிக்கும் வீரியமனதாய் !!!

மறுத்துப்போன மனிதனிடத்தும்
தினம் வெறுத்துப்போகமல்
வேலைபார்க்கும்
இன்றைய குப்பையில்லா குப்பைத்தொட்டிகள் ........

எழுதியவர் : இரா.சுடர்விழி (30-Mar-15, 11:15 am)
பார்வை : 289

மேலே