என்னவளே

திரும்பும் திசையெல்லாம் உன் முகம்தான் பெண்ணே!

சுட்டெரிக்கும் வெயில்கூட சுகம்தான் கண்ணே!
உன் நிழல் தொட நான் உனைத் தொடர்ந்தால்!

நீ காத்திருக்கும் பேருந்து நிழற்குடையில் இன்னொரு நிழற்குடையாய் என்னை நீ அறிவாய்!

உன் வீட்டு முற்றத்தில் குடியிருக்கும் சிட்டுக்களைக் கேட்டுப்பார்!
உனக்காகக் காத்திருக்கும் எனைக் காணாமல் எழுந்ததில்லை அவைகள்!

தெருவெங்கும் கோலம் போட்டுவரும் உன் காலடிச்சுவடுகளைக் கேட்டுப்பார்!
இந்நேரம் அது இனையாகச் சேர்த்திருக்கும் என் காலடிச்சுவடுகளை!

எனைக் கடந்துவந்த காற்றும் உனைத் தொடும்போதுரைக்கும்
அவன் சுவாசமே உன் வாசம் தானென்று!

உனைத் தொடர்ந்தே தொலைத்தேன் என்னை!
இருவரும் இனைந்தே தேடுவோமா? இல்லை தொலைந்துதான் போவேனா?

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (1-Apr-15, 12:19 am)
Tanglish : ennavale
பார்வை : 89

மேலே