இந்த எழுத்துலகில் உலாவறம் உங்கள் ரவிSRM இன் வாழ்க்கை பயணம் கதை
என்னுடைய பெயர் ரவி கடவுள் என்னையும் மனிதனாக இந்த மண்ணில் படைத்த நாள் 01/03/1989
நான் செஞ்சியின் அருகில் உள்ள ஒரு அழகிய அமைதியான பெண்மையான கிராமத்தில் பிறந்தவன்
அந்த கிராமத்தின் பெயர் கள்ளப்புளியூர்
என் பிறப்பிலே பெரும் சிக்கல்
என்னுடைய தாய்க்கு நான் ஐந்தாவது ஆண் பிள்ளை
எனக்கு முன் நால்வர் பிறந்தனர்
முதல் குழந்தை என் தாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது ஆனால் உயிருடன் அல்ல
அந்த பிஞ்சி மனசுக்கு இந்த நஞ்சுலகை காண விருப்பம் இல்லைப் போல் ஆகையால் தான் என் தாயின் புனிதமான கருவறையிலே தன் கண்களை மூடியது
இரண்டாவது ஒரு பெண் குழந்தை பிறந்தது ஒரு வருடத்திலே அச்செல்வத்தை எங்கள் பாட்டி அந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து விட்டனர்
இன்னும் இரண்டு ஆண் பிள்ளைகளும் இறந்தே பிறந்தன
கடைசியாக ஐந்தாவதாக என் தாயின் கருவறையில் பிரசவிக்க நான் காத்திருந்தேன் (தொடரும் பயணம்.......