வீரத்தமிழ் வேந்தர் பாவேந்தர்

வீரத்தமிழ் வேந்தர் பாவேந்தர்

முறுக்கி வைத்த மீசைக்காரர் பாரதி செதுக்கிய
நறுக்கி வைத்த மீசைக்காரர் பாரதிதாசன்
தமிழுக்கும் ஆசிரியர் தமிழர்களுக்கும் ஆசிரியர்.
ஆத்திகவெறி ஆடியபோது போதெல்லாம்
நாத்திகநெறியால் பகுத்தறிவு ஆணி அடித்தவர்.
தன் பூணூலை அறுத்தெறிந்த பாரதிக்கு மட்டும்
தாசன் ஆனார் பாரதிதாசன்
புரட்டுக் கவிஞர்கள் பலர் இருந்தக் காலத்தில்
புரட்சிக் கவிஞராய் வாழ்ந்த பாரதிதாசனுக்கு
நாங்கள் எல்லாம் தாசன் ஆனோம்.
தமிழர் யார் தமிழர் அல்லாதவர் யார்
பாரதிதாசன் எழுத்தைக் கண்டு தொழுபவர் தமிழரே
பாரதிதாசன் எழுத்தைக் கண்டு அலறுபவர் தமிழர் அல்லாதவரே.
இதழியல் உலகில் வான்கோழிகள் வலம் வந்த போது
மயிலாய் உலாவி ஒயிலாய் கூவியது குயில்
குயிலின் தொடர்ச்சியாய் முல்லைச்சரம் பயில்.
அக்காலத்துப் புலவர் பலர் பாடல்களில்
இலக்கணமே மிகுந்திருக்கும் தலைக்கணமே மிகுந்திருக்கும்
எக்காலத்தும் பொருந்தும் பாவேந்தர் பாடல்களில்
தமிழ்க்கணமே மிகுந்திருக்கும்.
புரட்சிக் கவிஞரின் மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்று புரட்சிக்கவியாம்
மிகச்சிறந்த படைப்புகளுள் இன்னொன்று பொன்னடியாராம்.
பாரதிதாசன் புகழைக் காலம் பாடட்டும் பாடட்டும்
எங்கெங்கும் செந்தமிழ் செழிக்கட்டும் செழிக்கட்டும்.

எழுதியவர் : damodarakannan (4-Apr-15, 7:30 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 89

மேலே