பூக்களுக்கு விலையில்லை

பூக்களுக்கு விலையில்லை
~ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»


வழி தவறிடும் தேனீக்கள்
வருவதும் போவதும்
வாடிக்கை என் வீட்டுக்குள்.

எரியும் குழல் விளக்கின் மீது,
சுவற்றில் தொங்கும் சட்டமிட்ட படத்தின் மீது,
கழுவிக் கவிழ்த்து வைக்கப்பட்ட பாத்திரங்கள் மீது,

இப்படி ஏதோ ஒன்றின் மீதமர்ந்து
என் குழந்தைகளின் கூச்சல்களையும் மீறி
ரீங்காரமிட்டுச் செல்லும்...

திரும்பிக் கூட பார்த்ததில்லை ஒரு நாளும்!
மேசை மீதிருந்த வாசமூட்டப்பட்ட
செயற்கைப் பூக்களை...!

தேனீக்கள் தேடி வந்தது
எதையென்று தெரியவில்லை
ஆனால்
பூக்களெனத் தோன்றுவதெல்லாம்
பூக்களில்லை என்றாயிற்று....!

~ஆதர்ஷ்ஜி

எழுதியவர் : ஆதர்ஷ்ஜி (5-Apr-15, 3:53 am)
சேர்த்தது : ஆதர்ஷ்ஜி
பார்வை : 134

மேலே