தமிழா் விடிவு வாசல் திறக்கவில்லை
கச்சதீவு அந்தோனியாரை கைநீட்டி வரம் கேட்கவும்.
நைனைநாகபூசணியில் நல்லபடி
நேர்திக்கடன் முடிக்கவும்
வல்லிபுரத்தான் தீர்த்தம்
வாய் நிறைய குடிக்கவும்
நல்லூர் கந்தன் வாசலில் நள்ளிரவு
வரை சுற்றி திரியவும் இனியும்
இடம் கொடுங்கள்
உங்கள் இதயவாசல் திறந்தும்
தமிழா் விடிவு வாசல் இன்னும்
திறக்கவில்லை?