விலகியக் கவிதை - தேன்மொழியன்

விலகியக் கவிதை
~~~~~~~~~~~~~

உளறிய உதடுகளை
உலரவைத்த ஈரமது ..

கதறியக் கவிதைகளை
நகலெடுத்த நடனமது..

முதிர்ந்த முகங்களை
முத்தமிடும் ஏக்கமது ..

ஒளிகற்றை ஓடைகளில்
ஊமையான உலகமது ..

தன்னிச்சைத் தருணங்களில்
ஆர்பரிக்கும் ஓசையது ..

மீட்டெடுத்த உடல்களில்
உறைந்துப்போன உயிரது...

நிரம்பிய நீரலையில்
நீந்தாத சுவாசமது ..

ததும்பிய தத்துவத்தில்
தலையில்லாத் தேகமது ..

பிடுங்கிய நரம்புகளில்
நடுங்கிய நாளமது..

விரும்பிய மொழிகளில்
விலகியக் கவியது ...
விசித்திரக் காதல். .


- தேன்மொழியன்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (6-Apr-15, 8:08 pm)
பார்வை : 120

மேலே